பருவமடைந்த சிறுமி, பெற்றோர்களின் முட்டாள்தனமான செயலால் நேர்ந்த பரிதாபம், சோகத்தில் உறவினர்கள்.!
girl died attack of gaja cyclone

பெற்றோர் மற்றும் உறவினர்களின் பழமையான மூடநம்பிக்கை சடங்குகளால் கஜாபுயலில் சிக்கி ஏழாவது படிக்கும் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயலால் நாகை, காரைக்கால், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதம் எற்பட்டது. மேலும் புயல் காரணமாக தற்போது வரை 45 போ் உயிாிழந்திருப்பதாக வருகின்றது. சேதமடைந்த பகுதிகள் விரைந்து சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஏழாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி சமீபத்தில் பூப்பெய்தியுள்ளார்.அதனால் அவருக்கான சடங்குகளை செய்த பெற்றோர், அந்தப் பெண்ணை தனியாக தங்கள் தென்னந்தோப்பில் உள்ள ஒரு குடிசையில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் அன்றிரவு கஜா புயல் கரையைக் கடக்கும்போது வீசிய சூறைக்காற்றால் சுற்றியிருந்த தென்னை மரங்கள் சாய்ந்து சிறுமி தங்கியிருந்த குடிசை மீது விழுந்துள்ளது.
மறுநாள் காலையில் பெற்றோர் வெளியில் வந்து பாா்த்த மாணவியின் பெற்றோா் மரங்கள் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தேடிப் பாா்த்ததில் மாணவி மரங்களுக்கு இடையே உயிாிழந்த நிலையில் இருந்துள்ளாாா்.பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பெற்றோர் மற்றும் உறவினர்களின் பழமையான மூடநம்பிக்கை சடங்குகளால் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே தற்போது வேதனையில் ஆழ்ந்துள்ளது.