திருமணமான ஒரு வருஷத்திலே இரவோடு இரவாக இளம்பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! துக்கத்தில் உறவினர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!
girl commit suicide for family problem
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருவத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் மின்வாரிய துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அய்யனார் குலத்துப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சில காலம் மகிழ்ச்சியாக இருந்த அந்த தம்பதியினர்களுக்கு இடையே தொடர்ந்து அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கார்த்திகா தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று தன் வீட்டிற்கு திரும்பிய நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மறுநாள் பிரபாகரன் கார்த்திகாவின் பெற்றோருக்கு போன் செய்து அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் கார்த்திகாவின் உடலை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக கூறி உறவினர்கள் தகராறு செய்த நிலையில் போலீசார் அவர்களை தடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பரிசோதனைக்கு பின்னர்தான் கார்த்திகா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவரும். மேலும் போலீசார் இதுகுறித்து பிரபாகரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் மேற்கொண்டு பிரச்சனை எதுவும் வராமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.