×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலெனும் பெயரில் பயங்கரம்.. கதறி அழுத 15 வயது சிறுமி.. தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

காதலெனும் பெயரில் பயங்கரம்.. கதறி அழுத 10ஆம் வகுப்பு சிறுமி.. தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

Advertisement

காதலிப்பதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனது குடும்பத்தாருடன் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சிறுமிக்கும் கோட்டையூரை  சேர்ந்த கணேசன் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த பழக்கம் சிறிது நாட்களில் காதலாக மலர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

சிறுமி தன் மீது வைத்துள்ள காதலை பகடைக்காயாக கொண்டு சிறுமியை வேட்டையாட நினைத்த காமுகன் கணேசன், சிறுமியை திருப்பத்தூருக்கு அழைத்து சென்றுள்ளான். 

மேலும் அவனது திட்டத்தின் படி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தன்னுடைய தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் கணேசனின் மீது புகார் அளித்துள்ளார். 

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் கணேசனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivagangai #girl #Rape
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story