×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

91 நாடுகளை சுற்றிவந்த ஜெர்மன் ஜோடி, மாமல்லபுரத்தில் இன்பசுற்றுலா..!

91 நாடுகளை சுற்றிவந்த ஜெர்மன் ஜோடி, மாமல்லபுரத்தில் இன்பசுற்றுலா..!

Advertisement

ஜெர்மனி நாட்டினை சேர்ந்தவர் தொல்பன் (வயது 39). இவரின் மனைவி மிகி (வயது 36). இவர்கள் இருவரும் கடந்த 12 வருடமாக இஸ்ரேல், இங்கிலாந்து, நியூசிலாந்து, துபாய் உட்பட 91 நாடுகளை சுற்றி வந்துள்ளனர். இந்த ஜோடி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. 

கடந்த சில வாரத்திற்கு முன்னதாக தம்பதி கப்பலின் மூலமாக மும்பை துறைமுகத்திற்கு நவீன வாகனத்துடன் வருகை தந்தனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் வாகனத்தை நிறுத்தினர். இதனை அங்கிருந்த மக்கள் பலரும் கண்டு ரசித்து சென்றனர். 

டிஸ்கவரி போன்ற சேனல்களில் மட்டும் பார்த்த நவீன சொகுசு வசதி கொண்ட வாகனத்தை மக்கள் பலரும் வியப்புடன் பார்த்தனர். படுக்கை, சமையல் அறை மற்றும் குளியலறை போன்ற வசதியும், கரடு முரடான இடங்களில் பயணிக்கும் வகையில் இராட்சத டயர்கள் பொருத்தப்பட்டு வாகனம் இருந்தது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Germany #Germany Couple #Mamallapuram #tour #Countries
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story