முதுகில் குத்திய சாந்தி! சென்னை தேனாம்பேட்டை பங்களாவில் சிக்கிய ரகசிய CCTV காட்சி...! ஜெம் வீரமணியின் அந்தரங்க லீலைகள் அம்பலம்... அடுத்தடுத்து அதிரடி காட்டும் போலீஸ்..!!!
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கில் சிசிடிவி காட்சிகள், ரகசிய டைரி, டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்து மத்திய குற்றப்பிரிவு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
ஜெம்’ கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை பங்களாவில் பதிவானதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள், கைப்பற்றப்பட்ட ரகசிய டைரி உள்ளிட்டவை தற்போது போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளன. இதனிடையே, 83 வயதான வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் குறித்து தீவிர ஆய்வு
வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விசாரணையை முடிக்க முயற்சி நடந்ததாக முன்பு புகார்கள் எழுந்திருந்தன. இதையடுத்து சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தினர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதாக கூறப்படும் காட்சிகள் தற்போது முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றன. அதில் வீரமணி ஒரு சிறுமியுடன் இருப்பது தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அதில் உள்ள பதிவுகளின் தன்மை குறித்து தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த வீடியோவை வைத்து வீரமணியை சிலர் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பணம் தொடர்பான பிரச்சினைக்குப் பிறகு சாந்தி தரப்பில் சில ஆதாரங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சாந்தி, அவரது கணவர் மற்றும் உதவியாளர் ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரகசிய டைரி, டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கின
விசாரணையின்போது வீரமணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ரகசிய டைரி வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை கைவிடச் செய்வதற்காக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பெருமளவு பணம் வழங்கப்பட்டதாக அதில் குறிப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களின் உண்மைத்தன்மையையும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களையும் போலீசார் தனியாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, சென்னை தி.நகரில் உள்ள வீரமணியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பென் டிரைவ்கள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில் உள்ள தகவல்களும் வழக்கின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி
மறுபுறம், வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமிகளை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதுவரை 10 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மேஜராகிவிட்ட அந்த பெண்களை சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று, ரகசிய முறையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக வழக்கை முறையாக கையாளவில்லை என்ற புகாரும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையடுத்து முந்தைய விசாரணை அதிகாரிகளாக இருந்த உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சற்று முன்... பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் வீரமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு...!!!