தமிழக மக்களுக்காக தமிழக பாஜக திரட்டிய நிவாரண நிதி எத்தனை கோடி தெரியுமா?
Gaja fund collection from BJP

கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கமலாலயத்தில் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மக்களோடு எப்போதும் பாஜக துணை நிற்கும் என கூறியுள்ளார்.