கொரோன சமயத்திலும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கூறிய முதல்வர்..! முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்த அதிரடி அறிவிப்பு..!
Free ration for may and june TN CM

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக பாதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்றுமுதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருப்பதால் பாதிப்பி அதிகரிக்குமா என்ற பயமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஏப்ரல் மாதம் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அதே போல மே மாதமும், வரும் ஜூன் மாதமும் என இரண்டு மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.