×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நற்செய்தி.. தமிழகத்தில் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்?.. விரைவில் அறிமுகம்.!

தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட விடியல் இலவச பேருந்து பயணத் திட்டத்தை, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் விரிவுபடுத்த அரசு ஆலோசனை செய்து வருகிறது.

Advertisement

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயணம் வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு பெண்களும் பயன் பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட விடியல் மகளிர் பயணத்திட்டம் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை வழங்கியது. இந்த திட்டம் பெரும் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை ஆண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கையும் இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இலவச பேருந்து பயணத் திட்டம்:

முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கான இலவச விடியல் பயணத் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டது. 

இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! மூன்று மெகா திட்டங்கள்! மகளிர் உரிமைத்தொகை முதல் பொங்கல் பரிசு வரை... தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

மக்கள் மத்தியில் வரவேற்பு:

இந்த திட்டத்தின் மூலமாக சாதாரண பேருந்துகளில் ஒவ்வொரு நாளும் 57.81 லட்சம் பெண்கள் பயணித்து பயனடைந்து வருகின்றனர். இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த திட்டம் தமிழக மக்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத்திட்டம்: 

இந்த திட்டத்தை ஆண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக எழுந்து வந்த நிலையில், அரசின் நிதிநிலை சீராகும் போது ஆண்களுக்கும் இந்த திட்டம் பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவலின் படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை விரைவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விரைவில் அறிவிப்பு:

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர்கள் பலன் பெறும்  பொருட்டு இந்த திட்டம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குஷியோ குஷி! 15 லட்சம் பேருக்கு டிச- 12 முதல் ரூ.1000, பொங்கல் பரிசாக ரூ.5000...! திமுக அரசின் சூப்பர் அறிவிப்பு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#இலவச பேருந்து பயணம் #Free Bus Scheme #விடியல் பயணத் திட்டம் #Vidiyal Payanam #Free Bus Scheme For Men
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story