முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி கோரி போராட்டம்… விவசாய சங்க நிர்வாகிகளை கைது செய்த போலீஸ்!
முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி கோரி போராட்டம்.. விவசாய சங்க நிர்வாகிகளை கைது செய்த போலீஸ்!
முழுமையாக பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து திருச்சியை நோக்கி புறப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், விவசாயிகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பாட்ஷா ரவி, தங்க தருமராஜன் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளையும் போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற இருந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற விவசாய சங்க நிர்வாகிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “எங்களுக்கு நடந்த கொடுமை இதுதான்”.. பெற்றோரிடம் கதறிய 4 மாணவிகள்; பள்ளியில் பரபரப்பு!
இதையும் படிங்க: ஆண் குழந்தையை பிரசவித்த 10ம் வகுப்பு மாணவி.. விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. திருச்சியில் பேரதிர்ச்சி.!