புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு.. போராட்டத்திற்கு நாள் குறித்த மீனவ கிராமங்கள்? இன்று அவசர ஆலோசனை!
புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு.. போராட்டத்திற்கு நாள் குறித்த மீனவ கிராமங்கள்? இன்று அவசர ஆலோசனை!
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து மீனவ அமைப்புகள் இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றன.
எண்ணூர் முதல் நைனார்குப்பம் வரையிலான பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.
பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், தங்களது பாரம்பரிய வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவ மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும், தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் பூர்வகுடி மீனவ மக்களை அவர்களது சொந்த வாழ்விடங்களில் இருந்து வேறு பகுதிகளுக்கு அப்புறப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகம் எங்கே தெரியுமா? தமிழக அரசு அரசாணை வெளியீடு!
இந்த நிலையில், இன்று நடைபெறும் அவசர ஆலோசனையில், அரசின் முடிவுக்கு எதிராக அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை கைவிட்டு, அதற்காக வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதும் மீனவ அமைப்புகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகம் எங்கே தெரியுமா? தமிழக அரசு அரசாணை வெளியீடு!