தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் ஆகாத விரக்தியில் வங்கி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு... கதறும் குடும்பத்தினர்!!

திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் ஆகாத விரக்தியில் வங்கி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு... கதறும் குடும்பத்தினர்!!

 Female Bank employee committed suicide in Chennai Advertisement

சென்னை செங்குன்றம் பகுதி அருகே உள்ள பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு. இவருக்கு கனகப்பிரியா(23) என்ற மகள் உள்ளார். கனகப்பிரியா அருகே உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கனகப்பிரியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைப்பெற்றுள்ளது. திருமணம் நிச்சயம் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு சிறிது கால அவகாசம் என்று கேட்டு திருமணத்தை நடத்தாமல் இருந்து வந்துள்ளனர்.

chennai

திருமணம் நிச்சயிக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த கனகப்பிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் கனகப்பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனகப்பிரியாவின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #suicide #Bank Employee
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story