மகளின் தோழியான சிறுமியை கடத்தி கற்பழித்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்..!
மகளின் தோழியான சிறுமியை கடத்தி கற்பழித்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்..!
மகளின் தோழியான 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் தேவேந்திரன் (வயது 38). இவருக்கு கள்ளக்குறிச்சி அருகாமையில் அமைந்துள்ள ஊரில் மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் 17 வயது சிறுமி. தனது மனைவி இறந்த காரணத்தால், தேவேந்திரன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவரின் 17 வயதுடைய மகளைப் பார்ப்பதற்காக, அவருடைய தோழி பல தடவை அவரது வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது தேவேந்திரன் சிறுமியிடம் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு அடிக்கடி மகளின் தோழியிடம் பேசி வந்துள்ளார். அத்துடன் சிறுமி கோயம்புத்தூரில் வேலைக்கிடைத்து சென்றதும், தேவேந்திரனும் அவரைத் தேடி அங்கு சென்றுள்ளார்.
அப்போது தேடுதல் வேட்டையில், தேவேந்திரனும், சிறுமியும் கேரளாவில் இருப்பது கண்டறியப்பட்டு, அழைத்து வந்தனர். பின் சிறுமியை அவரின் பெற்றோரிடம் விட்டுவிட்டு தேவேந்திரன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.