கணவனுடன் வாழ மறுத்த பெண் படுகொலை... பூச்சி மருந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.!!
கணவனுடன் வாழ மறுத்த பெண் படுகொலை... பூச்சி மருந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.!!
தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள முந்தல் கிராமத்தில் வசித்து வந்தவர் மாசுக்காளை. இவரது மனைவி பிரவீனா. இவர் போடி தேனி நெடுஞ்சாலையில் பங்காருசாமி கண்மாய் நுழைவு பகுதியில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போடி ஊரக காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர். பிரவீனாவை அவரது தந்தை தங்கையா கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மார்க்கையன் கோட்டையிலிருந்து வந்த பிரவீனா, முதலில் தனது தாய் மாமனை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. முதல் கணவரை பிரிந்து 10 ஆண்டுகளுக்கு பின் போடி அருகே முந்தல் கிராமத்தை சேர்ந்த மாசுக்காளை என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் தன் இரண்டாவது கணவன் மாசுக்காளையுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது
இதையடுத்து பிரவீனா, மார்க்கையன்கோட்டையிலுள்ள தனது தந்தை வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். பிரவீனாவின் தந்தையான தங்கையா வீட்டிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய பிரவீனா தன் தந்தை வீட்டிற்கு வருவதாக கூறியபோது, இதனை பற்றி பேசுவதற்கு போடி பங்காருசாமி கன்மாய் அருகே பிரவீனாவை வரவழைத்தார்.
இதையும் படிங்க: காதலனுடன் ஓடிய மனைவி... 5 வயது சிறுவன் அடித்து கொலை.!! டெம்போ டிரைவர் வெறி செயல்.!!
அங்கு வந்த பிரவீனாவை மீண்டும் கணவர் வீட்டுக்கே சென்று விடு என தந்தை கூறியுள்ளார். இதனை பிரவீனா சற்றும் ஏற்காமலிருந்த நிலையில் தங்கையா பூச்சி மருந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். பூச்சி மருந்து அருந்திய பிரவீனா சாகவில்லை எனத் தெரிந்ததும் மீண்டும் அவரது கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
போலீசார் கைபேசி அழைப்பு, கண்காணிப்பு கேமரா பதிவுகளில் அடிப்படையாக கொண்டு மோப்ப நாய்கள் உள்ளிட்ட தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரவீனாவின் தந்தை தான் கொலையாளி என கண்டறிந்தனர். இதையடுத்து பிரவீனாவின் தந்தையை போலீஸ் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "நட்பின் துரோகம்..." நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு.!! பொக்லைன் ஆபரேட்டர் கொடூர கொலை.!!