மகளுக்காக திமுகவில் இணைந்த தந்தை.! என்ன காரணம் தெரியுமா.?
மகளுக்காக திமுகவில் இணைந்த தந்தை.! என்ன காரணம் தெரியுமா.?
தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், சின்னமனூர், தேனி - அல்லிநகரம், பெரியகுளம், போடிநாயக்கனூர் என 6 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளின் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி ஜனவரி 17-ல் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்தது.
இந்தநிலையில், தேனி நகராட்சி தலைவர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கியதால் தி.மு.க., நிர்வாகிகள் பலரும் தங்கள் வீட்டு பெண்களை களம் இறக்கியுள்ளனர். இந்தநிலையில், தேனி நகராட்சி 6வது வார்டில் பால்பாண்டி என்பவர் தனது அண்ணன் மகள் அனுசுயாவிற்கு திமுகவில் சீட் கேட்டுள்ளார். இதனையடுத்து தி.மு.க அவருக்கு சீட் வழங்க முடிவு செய்தது.
இந்தநிலையில் திமுக கட்சி நிர்வாகி ஒருவர் 6வது வார்டில் சீட் கேட்கும் பெண்ணின் தந்தை நாகராஜ் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியாக உள்ளார். இவரின் மகள் வெற்றி பெற்றால் கட்சி மாறாமல் இருப்பார் என்ன உத்திரவாதம் என கேள்வி எழுப்பினார். இந்தநிலையில் பால்பாண்டி, அ.தி.மு.க., பொறுப்பில் உள்ள தனது அண்ணன் நாகராஜை அழைத்து வந்து தி.மு.க., நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைய வைத்தார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.