பிறந்த குழந்தையை கையில் எடுக்க பயந்து தயங்கிய தந்தை… நெகிழ்ச்சி தருணம்.. வைரல் வீடியோ.!
புதியதாக பிறந்த தனது பச்சிளம் குழந்தையை முதல் முறையாக கையில் எடுத்த தந்தை உணர்ச்சிவசப்படும் வீடியோ பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மருத்துவர் தனது கையில் தந்த பச்சிளம் குழந்தையை முதல் முறையாக தழுவிய தந்தை கண்கலங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
வீடியோ வைரல்:
சமூக ஊடகங்களில் தினமும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி விரைவாக வைரலாகி வருகின்றன. அவற்றில் சில வீடியோக்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாக மாறுகின்றன. அந்த வகையில், புதியதாக பிறந்த தனது பச்சிளம் குழந்தையை முதல் முறையாக கையில் எடுக்கும்போது உணர்ச்சிவசப்படும் தந்தையின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
உணர்வுப்பூர்வமான வீடியோ:
பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது அந்த குடும்பத்திற்கே மிகுந்த மகிழ்ச்சியான தருணமாக கருதப்படுகிறது. அந்த புதிய வரவுக்காக குடும்பத்தினர் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பார்கள். தாய்க்கு எவ்வளவு மகிழ்ச்சியை குழந்தையின் பிறப்பு அளிக்கிறதோ, அதே அளவு மகிழ்ச்சியையும் தந்தைக்கும் அளிக்கும். இத்தகைய உணர்ச்சிப்பூர்வமான தருணமே தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தயக்கத்துப்பின் பாசம்:
இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், மருத்துவமனையில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை மருத்துவர் அதன் தந்தையிடம் கொடுக்க முயற்சிப்பது காணப்படுகிறது. அந்த தருணத்தில் தந்தை மிகவும் உணர்ச்சிவசப்பட்டு முதலில் குழந்தையை கையில் எடுக்க தயங்குகிறார். பின்னர் மருத்துவர் கூறியதையடுத்து அவர் குழந்தையை கைகளில் எடுத்துக் கொள்கிறார்.
குவியும் பாராட்டுக்கள்:
அப்போது குழந்தையை தழுவியவுடன் அந்த தந்தை கண்கலங்கி உணர்ச்சிவசப்படுகிறார். அவரை மருத்துவர் ஆறுதல் கூறி தேற்றும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த உணர்ச்சிபூர்வமான தருணம் பதிவான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து தங்களது கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.