×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்த்து அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிரை விட்ட விவசாயி!.

farmer died in heart attack for Gaja strom

Advertisement


தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத சேதங்கள் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் கஜா புயல் காரணமாக நெற்பயிர்கள் மற்றும் வாழைத்தோப்புகள், தேக்கு,தென்னை, பலா போன்ற தோப்புகள்  நாசம் அடைந்தன.

இந்நிலையில் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த வைத்தியநாதன் என்ற விவசாயி நேற்று மாலை அவரின் வயலுக்கு சென்ற போது நெற்பயிர்கள் மற்றும் வாழைத் தோப்புகள் புயலால் தரைமட்டமாக்க கிடந்தது. 

தாம் பயிரிட்ட அணைத்தும் நாசமானதே என நினைத்து, திடீரென்று மயங்கி விழுந்த வைத்தியநாதன் மாரடைப்பால் உயிரிழந்தார். வைத்தியநாதன் இறந்ததையடுத்து அவர் மனைவி கதறி அழுதுள்ளார். அச்சம்பவம் அப்பகுதியையே சோகமாக்கியது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gaja cyclone #heart attack #farmers
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story