குடும்ப தகராறு.... இரண்டே மாதத்தில் துடிக்க துடிக்க மனைவியை கொன்ற கணவன்...!!
குடும்ப தகராறு.... இரண்டே மாதத்தில் துடிக்க துடிக்க மனைவியை கொன்ற கணவன்...!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சிலம்பரசன். இவருக்கு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி அரசு ஊரைச் சேர்ந்த ரோஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
திருமணம் செய்து கொள்வதற்கு முன் சிலம்பரசன் மூன்று ஆண்டுகள் துபாயில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவிக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் பிளேடால் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் நடந்த சம்பவத்தை கிள்ளை காவல் நிலையத்தில் கூறி சரணடைந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சிலம்பரசனின் மனைவி ரோஜாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.