×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செல்போனில் பலான படம் பார்த்த நபர்? போன் லைனில் வந்த டுபாக்கூர் போலீஸ்.. கோவையில் ருசிகர சம்பவம்.! 

ஆபாச படம் பார்த்ததாக காவல்துறையினர் போல பேசி பணம் பறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

இளைஞரை மிரட்டி பணம் பறித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

எஸ்.பி ஆபிசில் இருந்து பேசுகிறோம்.. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீசன் (வயது 50). இவரை மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு, தன்னை பீளமேடு எஸ்.பி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சாக்லேட் கொடுப்பதாக நடந்த கொடுமை.. அலறி ஓடிவந்து கதறிய சோகம்.!

ஆபாச படம் பார்த்ததாக.. 

தொடர்ந்து பேசிய அவர், ஜெகதீசனிடம் நீங்கள் ஆபாச படம் பார்த்த காரணத்தால், உங்களை கைது செய்ய போகிறோம். அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன என கூறி இருக்கிறார். மிரண்டுபோன ஜெகதீசன் தான் எதையும் பார்க்கவில்லையே என கூற, மர்ம நபர் உங்களை கைது செய்யாமல் விடமாட்டோம் என கூறி இருக்கிறார். மேலும், பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். 

ஜி.பெ-யில் பணம்:  

ஒருகட்டத்தில் ஜெகதீசனும் ரூ.38 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பின் சில நாட்கள் கழித்து தனது நண்பரிடம் இதுகுறித்த தகவலை பகிரவே, அவர் ஜெகதீசன் ஏமாற்றப்பட்டதை தெரிவித்துள்ளார். பின் உண்மையை அறிந்த ஜெகதீசன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் கோயம்புத்தூர் பச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சபரி (வயது 25), வினு (வயது 21) ஆகியோரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: கோவையில் ஷாக்... காதல் பெயரில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. தவெக நிர்வாகி கைது.. 20 பேருக்கு வலைவீச்சு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story