கோயம்பேடு பார் கொலை வழக்கில் புதிய திருப்பம் : 18 வயதிற்கும் குறைவான பெண் போலி ஆதார் மூலம் 22 வயதாக பதிவு.!
கோயம்பேடு பார் கொலை வழக்கில் புதிய திருப்பம் : 18 வயதிற்கும் குறைவான பெண் போலி ஆதார் மூலம் 22 வயதாக பதிவு.!
இளம்பெண் மரணம் :
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் ஏற்பட்ட மோதலை, சாலை விபத்தாக மாற்ற முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் உயிரிழந்த இளம் பெண் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது தோழியுடன் அந்த பாருக்கு சென்றிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சினிமாப்பாணியில் கொலை :
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாரில் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு வெளியே வந்த பின்னரும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த ஒரு தரப்பு, கார் மூலம் இருசக்கர வாகனத்தை மோதியதில் இளம் பெண் உயிரிழந்ததுடன், அவருடன் சென்ற மற்றொரு பெண் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சொந்த பெரியப்பா மகனுடன் திருட்டுத்தனமாக உறவு! தகராறில் காதலனே கடைசியில் எமனாக மாறிய கொடூரம்.... சடலத்தை எரித்து பகீர் பின்னணி...!!!
போலீஸ் விசாரணை :
இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த பாரில் குறைந்த வயதுடையவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்களா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் காரணமாக பார் நிர்வாகத்தின் ஆவணங்கள் மற்றும் வருகைப் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
போலீசார் சந்தேகம் :
உயிரிழந்த பெண் 18 வயதானவர் என ஆரம்பத்தில் தகவல் வெளியான நிலையில், அவரது வயது தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. போலீசார் மேற்கொண்ட ஆவண சரிபார்ப்பில், அவர் உண்மையில் 18 வயதிற்கும் குறைவானவர் என்ற சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.
மேலும் விசாரணையில், அந்த பெண்ணை 22 வயதுடையவராக காட்டும் வகையில் போலியான ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
போலி விவரங்கள் :
இதன் மூலம் வயது வரம்பு விதிமுறைகளை மீறி அவர் பாருக்குள் அனுமதிக்கப்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புதிய தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலி ஆவணங்களை தயாரித்தவர்கள் யார், அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, பார் நிர்வாகம் இதில் அலட்சியம் காட்டியதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒருத்திக்கு இத்தன்னை பேரா? ஆனால் ஒருத்தனையும் உயிருடன் விடல..மாமியார் கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்...!!!