×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு” வெளியீடு.! உச்சக்கட்ட குஷியில் ரசிகர்கள்.!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கள் பாடலான “ தமிழன் பாட்டு” வெளியாகும் நேரத்தை சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில்,  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் மாதவ் மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன்.  இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். 

மேலும் இப்படத்தில் பாரதிராஜா, மனோஜ், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை பெருமளவில் குறைத்துள்ளார். சமீபத்தில் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக “ தமிழன் பாட்டு” இன்று (14.12.2012) காலை பத்து மணிக்கு வெளியானது. தமன் இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 4. 50 மணிக்கு வெளியாகவுள்ளதாக சிலம்பரசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #eswaran
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story