மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு ஆட்டுத் கொட்டகையில் கணவன் செய்த பகீர் காரியம்! ஈரோட்டில் நடந்த அதிர்ச்சி...!!!
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே மனைவியைத் தாக்கிக் கொன்றதாக நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். உடலை ரகசியமாக அடக்கம் செய்ய முயன்றபோது தகவல் கிடைத்து போலீசார் மீட்டனர். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிக் கொன்றதாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரைவாய்க்கால் புதூர் பகுதியில் வசித்த ராஜேஸ்வரி (38), வீட்டின் அருகே இருந்த ஆட்டுக் கொட்டகையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை ரகசியமாக அடக்கம் செய்ய முயன்றபோது போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரைவாய்க்கால் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் அப்பகுதியில் உள்ள தறிப்பட்டறையில் தினக்கூலி நெசவாளர்களாக வேலை செய்து வந்தனர்.
இதையும் படிங்க: BREAKING: கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! வெளியான அரசு அறிவிப்பு..!!!
சம்பவத்தன்று நாகராஜும் ராஜேஸ்வரியும் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், நாகராஜ் மனைவியைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி, ஆட்டுக் கொட்டகையிலேயே உயிரிழந்தார்.
உடலை ரகசியமாக அடக்கம் செய்ய முயற்சி
மனைவி உயிரிழந்ததை மறைப்பதற்காக நாகராஜ், குடும்பத்தினரின் உதவியுடன் அவரது உடலை ரகசியமாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதற்கிடையே, இதுகுறித்த தகவல் சித்தோடு போலீசாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் கைது; போலீசார் தீவிர விசாரணை
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நாகராஜைக் கைது செய்தனர். மனைவி உயிரிழந்தது தொடர்பான சூழ்நிலைகள், உடலை மறைக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, உடலை அடக்கம் செய்ய முயன்றதில் குடும்பத்தினரின் பங்கு என்ன என்பது உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING: கனமழை காரணமாக இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...! சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!!