தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாயின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த 15 வயது மகன்; விசாரணையில் பரபரப்பு தகவல்.. தமிழகமே அதிர்ச்சி.!

தாயின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த 15 வயது மகன்; விசாரணையில் பரபரப்பு தகவல்.. தமிழகமே அதிர்ச்சி.!

Erode Mother Killed by Son Advertisement

 

தந்தையிடம் சொல்லி தாய் விடுதியில் சேர்த்துவிடுவாரோ என்ற பயத்தில் 9ம் வகுப்பு பள்ளி மாணவன் தாயின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பு. புளியம்பட்டி, சுங்கக்காரன்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்செல்வன். இவர் கான்டிராக்டராக பணியாற்றி வருகிறார். அருள் செல்வனின் மனைவி யுவராணி (வயது 36). இவர் மின்வாரியத்தில் உதவியாளராக இருந்து வருகிறார். தம்பதிகளுக்கு 15 வயதுடைய மகனும், 12 வயதுடைய மகளும் இருக்கின்றனர். சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்து மகன் 9ம் வகுப்பு படித்து வருகிறார். 

புளியம்பட்டியில் செயல்பட்டு வரும் பள்ளியில் மகள் படிக்கிறார். 9ம் வகுப்பு மாணவனான மகனுக்கு படிப்பு வரவில்லை என்று கூறி அவ்வப்போது யுவராணி அவனை கண்டித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யுவராணியின் மகன் தன்னால் விடுதியில் தங்கியிருந்து படிக்க இயலாது என்று கூறி வீட்டிற்கே வந்துள்ளார்.

வீட்டில் தங்கியிருந்தவாறு தினமும் பள்ளிக்கு சென்றுவந்த நிலையில், தாய் தனது மகனுக்கு தினமும் அறிவுரை கூறி வந்துள்ளார். இந்த விஷயம் சிறுவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த காலாண்டு தேர்வில் மகன் சரிவர மதிப்பெண் எடுக்கவில்லை என்பதால், தாயார் மகனிடம் தந்தையிடம் சொல்லி விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்கிறேன் என கண்டித்துள்ளார்.

erode

இதனால் தாயின் மீதான கோபம் மகனுக்கு அதிகரிக்கவே, நேற்று தந்தை வேலை விஷயமாக கோயம்புத்தூர் சென்றதும் தாய் மீண்டும் மகனை கண்டித்து இருக்கிறார். இதனால் மகன் பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாகி இருக்கிறான். இரவில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கிய நிலையில், யுவராணி தனது மகளுடன் உறங்கியுள்ளார். தாயின் மீது ஆத்திரத்தில் இருந்த மகன் தன்னை மீண்டும் விடுதியில் சேர்த்துவிடுவார்கள் என்ற பயத்தில், தாயின் மீது பூந்தொட்டியை போட்டு இருக்கிறான்.

ஆத்திரம் அடங்காமல் மீண்டும் பூந்தொட்டியை எடுத்து தலையில் போட, படுகாயமடைந்த யுவராணி அலறித்துடித்துள்ளார். சிறுவனின் தங்கையும் தாயின் அலறல் கேட்டு எழுந்து அலறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்க்கையில் யுவராணி இரத்த வெள்ளத்தில் இருந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் நிகழ்வித்திற்கு விரைந்து விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்கையில் சிறுவனின் அடையாளம் உறுதியானது. இதனையடுத்து, பு. புளியம்பட்டி காவல் துறையினர் தப்பியோடிய சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #tamilnadu #ஈரோடு #son #Murder #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story