×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்! அவனை சும்மா விடாதீங்க.... இன்ஸ்டா மூலம் முடிந்துப்போன ஈரோடு பெண்ணின் கடைசி நிமிடங்கள்! பகீர் சம்பவம்!!!

ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞர், திருமணமான பெண்ணை தீவைத்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம், இறுதியில் கொடூரமான குற்றச் சம்பவமாக மாறியுள்ளது. திருமணமான இளம்பெண் ஒருவர் தீக்காயங்களால் உயிரிழந்த நிலையில், அவருக்கு நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் அறிமுகத்தால் தொடங்கிய பிரச்சினை

பாரதி நகர் 3-வது வீதியைச் சேர்ந்த 24 வயதான வினோதினி என்பவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த நவீன் என்ற நவநீதகிருஷ்ணனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரியவந்ததைத் தொடர்ந்து, வினோதினிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் குடும்பத்தினரின் சமரசத்தால் இருவரும் மீண்டும் இணைந்து வாழத் தொடங்கியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரு நொடி ஆத்திரத்தில் நொறுங்கிய குடும்பம்! தந்தையே எமனாக மாறிய அவலம்.....இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!

அதன்பிறகு, நவீன் இருவரின் நெருக்கமான புகைப்படங்களை வினோதினியின் கணவருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், வினோதினி கடந்த ஓராண்டாக தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம்

தகவலின்படி, ஜூலை 28-ஆம் தேதி இரவு வினோதினியின் வீட்டுக்குச் சென்ற நவீன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறின் போது வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு வெளியே வந்த வினோதினியின் தாய், தீக்காயமடைந்த நிலையில் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

போலீசார் தீவிர விசாரணை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி, தீ வைத்தது நவீன் எனத் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவத்தின் போது லேசான தீக்காயமடைந்த நவீன், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: சமாதானமாக பேசி அம்மா வீட்டில் இருந்த மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்த கணவன்! இரவு கொடூரமாக தாக்கி... தூக்கில் தொங்கவிட்டு மாமனார், மாமியாருக்கு போட்ட வீடியோ கால்! பகீர் சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Erode Crime #instagram friendship #police investigation #Tamil Nadu Crime #Vinodhini
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story