இன்ஸ்டா கள்ளகாதலால் விபரீதம்.. பெண் நள்ளிரவில் வீடுபுகுந்து எரித்துக்கொலை.. ஈரோட்டில் திக் திக் சம்பவம்.!
கள்ளகாதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளகாதலியின் வீடுபுகுந்து எரித்துக்கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டார். தன்மீது தீ வைத்த ஆத்திரத்தில் பெண்ணும் எரியும் தீயுடன் கள்ளக்காதலனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
தம்பதி:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாரதி நகர், 3 வது தெருவில் வசித்து வருபவர் சென்னப்பன். இவரின் மகள் வினோதினி (வயது 24). இவரின் கணவர் சூர்யா (வயது 28). தம்பதிகளுக்கு 4 வயதுடைய தனிஷ் என்ற மகன் இருக்கிறார். திருப்பூரில் செயல்படும் பனியன் நிறுவனத்தில் டைலராக சூர்யா வேலை பார்த்து வந்ததால், இவர்கள் திருப்பூரில் தங்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!
செல்போன் அடிமை:
எந்த நேரமும் செல்போன் பார்க்கும் பழக்கம் கொண்ட வினோதினிக்கும் - அவரின் கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சூர்யா தினமும் வேலைக்குச் சென்றபின், வினோதினி பலரிடம் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, சாயல்குடி, அரண்மனைத்தெருவில் வசித்து வந்த நவநீதகிருஷ்ணன் (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இவர் சிம்கார்டு விற்பனை செய்து வருகிறார்.
கள்ளக்காதல்:
இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற, ஒருகட்டத்தில் வினோதினி - சூர்யா இடையே குடும்பப்பிரச்சனையும் அதிகரித்து இருக்கிறது. இதனால் கணவரை பிரிந்த வினோதினி, மகனுடன் பெற்றோரின் வீடு அருகேயுள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும், ஆர்கானிக் கடையிலும் விற்பனையாளராக வேலை பார்த்து இருக்கிறார். கள்ளக்காதல் பழக்கமும் தொடர்ந்துள்ளது.
கைவிட்ட பெண்:
இதனிடையே, நவநீதனின் செயல்கள் பிடிக்காத காரணத்தால் வினோதினி பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் வினோதினிக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என நவநீதன் சந்தேகப்பட்டு தகராறு செய்து இருக்கிறார். நேற்று முன்தினம் திடீரென ஈரோடு வந்த நவநீதன், நள்ளிரவில் வினோதினியின் வீட்டுக்குச் சென்று இருக்கிறார்.
கொடூரம்:
மகனுடன் உறங்கிக்கொண்டு இருந்த பெண்ணை எழுப்பி கதவை திறக்கச்ச்சொல்ல, தூக்கத்தில் இருந்த வினோதினியும் கதவை திறந்துள்ளார். அப்போது, என்னிடம் எதற்காக பேசவில்லை என சண்டையிட, பதிலுக்கு வினோதினியும் சண்டையிட்டு இருக்கிறார். அச்சமயம் எழுந்த வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை வினோதினியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
உயிரிழப்பு:
இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நவநீதனை கைது செய்தனர். மேலும், மரண வாக்குமூலத்தையும் வினோதினி பதிவு செய்ததால், நவநீதனின் மீதான வழக்கு உறுதி செய்யப்பட்டது.
கைது எப்படி?
பெண்ணை தீயிட்டு கொளுத்தியதால், விநோதினியும் கள்ளக்காதலனை கொலை செய்யும் எண்ணத்துடன் அவரை கட்டிப்பிடித்து இருக்கிறார். ஆனால், நவநீதன் தப்பி சென்றாலும், கரூரில் செயல்படும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகி இருக்கிறார். அவரின் செல்போன் நம்பரை டிராக் செய்த அதிகாரிகள், அதிரடியாகச் சென்று நவநீதனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் வெறிச்செயல்.. பெற்ற மகனுக்கு கொல்லி வைக்க தந்தை செய்த துணிகரம்? பதறவைக்கும் கொடூரம்.!