வீட்டு வேலை செய்யல.. அப்பா-அம்மா திட்டிட்டாங்க.. கல்லூரி மாணவி விபரீதம்.. ஈரோட்டில் சோகம்.!
Erode News: வீட்டுவேலை செய்யாததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
பெற்றோரின் கண்டிப்பால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
கல்லூரி மாணவி:
19-Year-Old College Student Dies: ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், குள்ளக்காடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி நீலாவதி. தம்பதிகளுக்கு 21 வயதுடைய சஞ்சனா என்ற மகளும், 19 வயதுடைய சோனியா என்ற மகளும் இருக்கின்றனர். சஞ்சனா ஈரோட்டில் செயல்படும் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: வேலைக்கு செல்லாமல் நாள் முழுக்க சூதாட்டம்.. ரூ.15 லட்சத்தை இழந்த கூலித்தொழிலாளி தற்கொலை.!
பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு:
இரண்டாவது மகளான சோனியா தனியார் கலை & அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். சம்பவத்தன்று பிற்பகல் நேரத்தில் வீட்டில் இருந்த சோனியாவை, வீட்டு வேலைகளை கவனிக்குமாறு அவரின் தாய் நீலாவதி கூறி இருக்கிறார். ஆனால், மாணவி எந்த வேலைகளையும் செய்யவில்லை.
கண்டிப்பு:
இதனால் தாய்-தந்தை இருவரும் மாணவியை கண்டித்த நிலையில், மனமுடைந்துபோன சிறுமி வீட்டின் அறைக்கதவை உள்பக்கமாக பூட்டி இருக்கிறார். இதனால் பதறிப்போன பெற்றோர் கதவை திறக்குமாறு கூறியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்தபோது, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மரணம் உறுதி:
சோனியாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிஸ்கட் சாப்பிடுவதில் அக்கா-தம்பி சண்டை.. பரிதாபமாக பறிபோன உயிர்.. திண்டுக்கல்லில் சோகம்.!