×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேராசிரியரின் மனைவியை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட குடும்ப நண்பர்.. பகீர் வாக்குமூலம்..!

பேராசிரியரின் மனைவியை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட குடும்ப நண்பர்.. பகீர் வாக்குமூலம்..!

Advertisement

ரூ.3 ஆயிரம் கடன் கொடுக்க மறுப்பு தெரிவித்த ஓய்வுபெற்ற பேராசிரியரின் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பயங்கரம் ஈரோடு அருகே நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, லட்சுமி நகர் கே.கே நகர் 3 ஆவது வீதியில் வசித்து வருபவர் கணேசன். இவர் ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் ஆவார். இவரின் மனைவி வளர்மதி (வயது 55). இந்த தம்பதிக்கு சிவரஞ்சனி, சிவசங்கரி என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார்கள். 

நேற்று கணேசன் பென்ஷன் தொகை தொடர்பாக பவானிக்கு சென்றுவருவதாக கூறி சென்ற நிலையில், வீட்டில் வளர்மதி மட்டும் தனியே இருந்துள்ளார். பவானிக்கு சென்ற கணேசன் மனைவிக்கு தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து மீண்டும் வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது.

வீட்டில் இருந்த டி.வி ரிமோட் மற்றும் வளர்மதியின் செல்போன் உடைக்கப்பட்டு இருந்த நிலையில், வீட்டிற்குள் சென்று கணேசன் பார்க்கையில் மனைவி வளர்மதி இரத்த வெள்ளத்தில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கொலை சம்பவம் தொடர்பாக சித்தோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பவானி காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் ஆணையாளர், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது. சம்பவ இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய், வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரம் வரை சென்று நின்றது.

வளர்மதியின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு நடந்த விசாரணையில், வீட்டின் அருகே இருந்த சி.சி.டி.வி கேமிரா கண்காணிக்கப்பட்டது. அப்போது, மர்ம நபர் வந்து செல்வது உறுதியாகவே, அவர் பவானி லட்சுமி நகரை சேர்ந்த தனராஜ் என்பவரின் மகன் ராஜா @ நிகோலஸ் என உறுதி செய்யப்பட்டது. அவரை தனிப்படை காவல் துறையினர் தேடி வந்தனர். 

அங்குள்ள காளிங்கராயன்பாளையம் பேருந்து நிலையத்தில் நிகோலஸ் இருப்பது உறுதியாகவே, சித்தோடு காவல் துறையினர் விரைந்து சென்று அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்து நிகோலஸ் அளித்துள்ள வாக்குமூலத்தில், "வளர்மதியின் வீட்டருகே உள்ள ஹோட்டலில் நான் தொழிலாளியாக பணியாற்றி வருகிறேன். 

எனது மனைவி பேராசிரியர் கணேசனிடம் கல்லூரியில் பயின்ற மாணவி ஆவார். எனது மாமா எட்வின் சுந்தரும், பேராசிரியர் கணேசனும் நண்பர்கள். அதனால் பேராசிரியர் கணேசனின் குடும்பத்தினருடன் சகஜமாக பழகி வந்தேன். எனக்கு அவசரமாக ரூ.3 ஆயிரம் தேவைப்பட்ட நிலையில், நேற்று மதியம் 2 மணிக்கு கணேசனின் வீட்டிற்கு சென்றேன். 

அப்போது, அவரின் மனைவி வளர்மதி மட்டும் இருந்த நிலையில், அவரிடம் ரூ.3 ஆயிரம் அவசர தேவை என்று கூறி கடன் கேட்டேன். வளர்மதி தன்னிடம் பணம் இல்லை என்று மறுக்கவே, அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டதால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான், "இவ்வுளவு வசதி இருந்தும் ரூ.3 ஆயிரம் கடன் தரமுடியதா?" என்று கேள்வி எழுப்பினேன். 

ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து வளர்மதியின் தலை, கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்தேன். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடி மற்றும் மற்றொரு தங்க செயினை திருடிக்கொண்டு தப்பி சென்றேன். நகையை விற்பனை செய்து மும்பை செல்ல திட்டமிட்ட நிலையில், காவல் துறையினர் என்னை கைதுசெய்துவிட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #Bhavani #Murder #police #Investigation #tamilnadu #Tamil Spark
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story