வங்கி கணக்கில் வந்து சேரும் ரூ.3000 பணம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு..!!!
புதியதாக பணியில் சேரும் ஊழியர்களின் EPFO கணக்கில் குறைந்தபட்சம் ₹3,000 ஊக்கத்தொகை வரவு வைக்கப்படுகிறது. EPFO 3.0 மூலம் பல புதிய வசதிகளும் அறிமுகமாகியுள்ளன.
நாடு முழுவதும் புதிதாக பணியில் சேரும் இளம் ஊழியர்களுக்கு மத்திய அரசு முக்கிய நிதி ஊக்கத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, முதல் முறையாக வேலைக்குச் சேரும் தகுதியான ஊழியர்களின் EPFO கணக்குகளில் குறைந்தபட்சம் ₹3,000 சிறப்புத் தொகை வரவு வைக்கப்படுகிறது. மே மாதத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தொகை ஜூன் மாதத்தில் கணக்கில் சேரத் தொடங்கியுள்ளது.
தொழிலாளர் நலனை மேம்படுத்தவும், இளைஞர்களிடையே நீண்டகால சேமிப்புப் பழக்கத்தை உருவாக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நடைமுறை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: புதிய ரேஷன் கார்டு வாங்குபவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி கூறிய முக்கிய அறிவிப்பு !!!
முதல் மாத PF பங்களிப்பை ஏற்கும் அரசு
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, புதிய ஊழியர்களின் முதல் மாத PF சந்தாவை அரசே ஏற்றுக்கொள்கிறது. மாதச் சம்பளம் ₹1 லட்சம் வரை பெறும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹15,000 வரை மூன்று தவணைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்தத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படாது. மாறாக, ஊழியர்களின் EPFO கணக்கு மூலமாகவே சேமிக்கப்படுகிறது. இதனால் எதிர்கால ஓய்வூதிய நிதி வலுப்பெறுவதோடு, பணியாளர்களுக்கு கூடுதல் நிதிப் பாதுகாப்பும் கிடைக்கிறது.
EPFO 3.0 மூலம் புதிய வசதிகள்
இதற்கிடையில், தொழில்நுட்ப அடிப்படையிலான பல சீர்திருத்தங்களை உள்ளடக்கிய EPFO 3.0 திட்டமும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பு இணையதளப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சில சேவைகளுக்கு மாற்றாக, தற்போது 'Passbook Lite' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு Login மூலம் ஊழியர்கள் தங்களின் PF இருப்பு, எடுத்த தொகை, ஓய்வூதிய விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை விரைவாக அறிந்துகொள்ள முடியும். மேலும், வேலை மாறும் ஊழியர்கள் தேவையான Annexure K பரிமாற்றச் சான்றிதழையும் ஆன்லைனிலேயே எளிதாகப் பெறலாம்.
UPI, ATM மூலம் PF பணம் எடுக்கும் வசதி
அடுத்த கட்டமாக, UPI மற்றும் ATM வழியாக PF பணத்தை சில நொடிகளில் பெறும் வசதியையும் EPFO அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மென்பொருள் பொறியாளர்கள் முதல் தொழிற்சாலை மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் வரை அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, புதியதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் தங்களின் EPFO கணக்குகளை அவ்வப்போது சரிபார்த்து, அரசின் இந்த நலத்திட்டப் பலன்களைப் பெறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 20 நாட்களில் வங்கி கணக்கில் ரூ. 9,000 வரை வரவு வைப்பு..... மகளிர் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை! ஸ்டாலினின் அதிரடி சர்ப்ரைஸ் கிப்ட்!!!