சாலை விபத்தில் பலியான மென் பொறியாளர்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.!
சாலை விபத்தில் பலியான மென் பொறியாளர்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள வடகரை காமாட்சி நகா் பகுதியை சேர்ந்தவர் சு.ஹரிமுகேஷ். இவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் ஹரிமுகேஷ் பள்ளிக்கரணை ஆயில் மில் சாலையில் ஒரு வாடகை வீட்டில் தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார். இதை தொடர்ந்து ஹரிமுகேஷ் சம்பவத்தன்று அதிகாலை பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மயிலை பாலாஜி நகா் வேளச்சேரி பிரதான சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வேகமாக வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஹரிமுகேஷ் மீது மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த ஹரிமுகேஷை அங்கிருந்தவா்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஹரிமுகேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹரிமுகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.