வங்கிக் கணக்கில் ரூ.4,000..... உடனே இதை போய் செய்து முடித்துடுங்க! முதல்வர் விஜய் அரசின் அதிரடி அறிவிப்பு..!!!
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்கள், எதிர்கால அரசின் உதவித்தொகை திட்டங்களுக்கு தகுதி பெற வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டங்கள் குறித்து தொடர்ந்து விவாதம் நிலவி வரும் நிலையில், தகுதியுடைய பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் தங்களின் Employment ID பதிவை உடனுக்குடன் புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற திட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வேலை தேடி வரும் இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000 ஒருமுறை மட்டும் தான்....! யார் யாருக்கு பணம் ? எடப்பாடியின் அதிரடி விளக்கம்!!!
வேலைவாய்ப்பு பதிவு ஏன் முக்கியம்?
இந்த வகை நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதுடன், வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காலாவதியாகாமல் புதுப்பித்து நேரடிப் பதிவேட்டில் வைத்திருப்பது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் போது, இந்த பதிவே முக்கிய தகுதிகளில் ஒன்றாக கருதப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்
அரசாணை மற்றும் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் வெளியாகும் வரை, தகுதியுள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு தாமதமின்றி விண்ணப்பிக்க முடியும்.
இதையும் படிங்க: மக்களே... கவலையை விடுங்க! வங்கி கணக்கில் வருகிறது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500.... முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.!!!