இரண்டே வரியில் ராஜினாமா பன்றேன்னு மெயில் அனுப்பிய ஊழியர்! அதுக்கு முதலாளி அனுப்பிய அதிர்ச்சியான பதில்...! உறைந்துபோன இணையம்..!!!
இரண்டு வரிகளில் ராஜினாமா செய்த ஊழியருக்கு மேலாளர் அளித்த மரியாதையான பதில் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. பதிவு 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.
இரண்டு வரிகளில் எழுதப்பட்ட ஒரு ராஜினாமா மின்னஞ்சலும், அதற்கு மேலாளர் அளித்த மனம் கவரும் பதிலும் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த உரையாடல், பணியிடங்களில் மரியாதை மற்றும் நல்லுறவின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. தற்போது இந்த பதிவு 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.
இரண்டு வரிகளில் முடிந்த ராஜினாமா கடிதம்
பொதுவாக வேலை விலகல் கடிதங்கள் நீண்ட விளக்கங்களோ அல்லது பணியிட அனுபவங்கள் குறித்த குறிப்புகளோ இடம்பெறும் வகையில் இருக்கும். ஆனால் இங்கு ஒரு ஊழியர், “ஐயா, நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். எல்லாவற்றிற்கும் நன்றி” என்று மிகவும் சுருக்கமாக தனது முடிவை தெரிவித்திருந்தார்.
அவரது மின்னஞ்சலில் கூடுதல் காரணங்கள் அல்லது விளக்கங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இருந்தாலும் அதன் எளிமையும் நேர்மையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பயணிகளே கவலை படாதீங்க.... என் மனைவியும் இந்த விமானத்தில் தான்! பைலட் சொன்ன ஒரே வார்த்தையால் அனைவரின் இதயங்ளும்... வைரல் வீடியோ!
மேலாளரின் பதில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது
இந்த மின்னஞ்சலுக்கு மேலாளர் சௌரப் குப்தா அளித்த பதில்தான் இணையத்தில் அதிகம் பாராட்டுகளை பெற்றுள்ளது. தனது மறுமொழியில், “ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இங்கு வரலாம். அந்த கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதில், ஊழியர்களுடன் நல்ல உறவை பேணும் Corporate Culture-க்கு ஒரு எடுத்துக்காட்டாக பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
நெட்டிசன்களின் பாராட்டு
ஜூன் 15ஆம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவு, குறுகிய நேரத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தகவலின்படி, பணியிடங்களில் பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மறையான அணுகுமுறை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உரையாடல் காட்டுவதாக சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வேலை விலகும் தருணத்திலும் நல்ல உறவை தொடர முடியும் என்பதை இந்த எளிய மின்னஞ்சல் பரிமாற்றம் எடுத்துக்காட்டியுள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பார்க்கவே பயமா இருக்கு! ராட்சதக் கழுகிடம் சிக்கி சின்னாபின்னமான மான்..... மின்னல் வேகத்தில் நடந்த அபூர்வ வேட்டை! வைரலாகும் வீடியோ!