×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுவுக்காக கொடூரம்.. காதோடு அறுத்து நகையை பறித்த மகன்.. தாய் பலி.! 

மதுஅருந்த பணம் கொடுக்காத தாய் மகனால் உயிரிழந்தார். 

Advertisement

தாயின் 4 கிராம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மகனால், தாய் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

லாரி ஓட்டுநர்: 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, பாதிரி கிராமத்தில் வசித்து வருபவர் மங்கலட்சுமி (வயது 80). இவரின் மகன் ஏழுமலை (வயது 47). ஏழுமலை லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். மதுபோதைக்கு அடிமையானவர். 

இதையும் படிங்க: 3 வயது சிறுமி நாய் தாக்கி பலி.. 2 நாட்கள் போராடி பிரிந்த உயிர்.. கண்ணீர் சோகம்.!

பணம் கேட்டார்: 

இதனிடையே, கடந்த 28 ம் தேதி தாயை பார்க்க வந்த ஏழுமலை, மதுபானம் அருந்த பணம் கேட்டு இருக்கிறார். தாயோ பணம் இல்லை என்று கூறவே, ஆத்திரமடைந்த மகன், தாயிடம் இருந்த 4 கிராம் கம்மலை காதோடு அறுத்து தப்பிச்சென்றார். 

பலி: 

காயத்துடன் அலறித்துடித்த மூதாட்டியை மீட்ட அக்கம் பக்கத்தினர், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: மதுபோதையில் வெறிச்செயல்.. பெற்ற மகனுக்கு கொல்லி வைக்க தந்தை செய்த துணிகரம்? பதறவைக்கும் கொடூரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Tiruvannamalai #Mother Son
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story