×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மார்வாடிகளுக்காக தமிழர்களை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா..!! சீமான் கொந்தளிப்பு..!!

மார்வாடிகளுக்காக தமிழர்களை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா..!! சீமான் கொந்தளிப்பு..!!

Advertisement

மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, தமிழக அரசு தமிழர்கள் இறைச்சி உண்ண தடைவிதிப்பதா... என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்வாடிகள் மகாவீரர் ஜெயந்தியை கொண்டாடுவதற்காக தமிழக அரசு இறைச்சி கடைகளை மூட  உத்தரவிட்டிருப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இறைச்சிக்கடைகளை மூட திமுக அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மகாவீரர் போற்றுதலுக்குரியவர், மேலும் அவரது திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்துமில்லை.

ஆனால், அதனைக் காரணமாகக் காட்டி, இறைச்சிக் கடைகளை மூடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. உணவு என்பது அவரவர் விருப்ப உரிமை. அதில் அரசு தலையிட்டு அதை தடைசெய்வது என்பது பாசிசம்.

இங்கு சமணத்தைத் தழுவி நிற்கும் மார்வாடி மக்களின் உணர்வுக்காக இறைச்சிக் கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்படுவது என்பது கண்டிக்கப்பட வேண்டிய நடவடிக்கை. 

தமிழர்களின் திருநாளான பொங்கல் பெரு விழாவுக்கு ராஜஸ்தானில் எவ்வித விடுமுறையும் இல்லாத போது, மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுவதற்காக, அவர்களது வசதிக்காக, உணர்வுக்காகவும் தமிழ்நாட்டிற்குள் இறைச்சிக் கடைகளை மூடுவது ஏற்புடையது இல்லை.

மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, தமிழர்கள் இறைச்சி உண்ண தடைவிதிப்பது என்பது அப்பட்டமான சனநாயகத் துரோகம்.

"எல்லோருக்குமான அரசு", எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, ஒரு தரப்பினரை திருப்தி செய்ய தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இறைச்சிக் கடைகளை மூடும் எதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Mahavir Jayanti #Ban on Eating Meat #Deceive Tamils #Marwaris #Seamen
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story