Video: நாயை காருக்குள் வைத்து பூட்டி விட்டு! கோயிலுக்குள் சென்ற நபர்! சிறிது நேரத்திலே துடிதுடித்து போன உயிர்! மனதை உலுக்கும் வீடியோ.....
உத்திரப்பிரதேசம் பிருந்தாவனத்தில் காருக்குள் பூட்டப்பட்ட நாய் வெயிலில் தவித்து உயிரிழந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் ஒரு மனதை உலுக்கும் சம்பவம் நடந்ததுள்ளது. ஷயா மருத்துவமனை அருகே, தனது நாயை காருக்குள் பூட்டி வைத்துவிட்டு ஒரு பக்தர் அருகிலுள்ள கோவிலுக்கு பூஜை செய்யச் சென்றார். ஆனால், கடுமையான வெயிலில் கார் மூடி இருந்ததால் காற்றில்லாமல் அந்த நாய் தவித்து உயிரிழந்தது.
நாயின் கத்தும் சத்தங்களை கேட்ட பொதுமக்கள் உடனடியாக உதவிக்காக ஓடினர். கதவை திறக்க முயன்றும் முடியாமல், சிலர் கண்ணாடியை உடைப்பதற்காக முன்வந்தனர். ஆனால் மற்றவர்கள் அதைத் தடுக்க, பூட்டு தொழிலாளி ஒருவரை அழைத்து கதவை திறக்க நேர்ந்தது.
கதவை திறந்தபோது நாய் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. இதனால், அருகில் இருந்தவர்கள் மனதில் பெரும் பீதியையும் வருத்தத்தையும் அடைந்தனர். நாயை வெளியே வைக்க பொதுமக்கள் முன்பே கேட்டிருந்த போதிலும், அந்த பக்தர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
இந்த துயரமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், பலரிடம் கோபமும் வேதனையும் எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம், வாகனங்களில் செல்லும் போது செல்லப்பிராணிகளை எந்த சந்தர்ப்பத்திலும் தனியாக விட்டுவிடக்கூடாது என்பதை கடுமையாக நினைவூட்டுகிறது.