சென்னையில் அடிக்கும் வெயில் கொரோனாவை கட்டுப்படுத்துமா.? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்..!
Does chennai heat will control corono minster vijayabasker advice
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 300 கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இன்றுவரை 7 பேர் கொரோனாவால் இந்தியாவில் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பலவேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கோடைகாலம் வர இருப்பதாலும், இப்போதில் இருந்தே வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், இந்த வெயிலில் கொரோனா வைரஸ் உயிர் இழந்துவிடும் என பலரும் நம்பிவருகின்றனர். இது உண்மையா? தமிழகத்தில் நிலவும் வெப்பநிலைக்கு கொரோனா பரவ வாய்ப்பில்லையா?
இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் தமிழக சுகாதார துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்கள். 40 டிகிரி வெப்பநிலை இருக்கும் துபாய் நாட்டில், கொரோனாவால் ஒரே நாளில் 50 பேர் பாதிக்கப்படும்போது, துபாயை விட வெப்பநிலை குறைவாக உள்ள சென்னையில் வெப்பநிலையால் கொரோனா கட்டுப்படும் என்பது உண்மையல்ல.
தேவை இல்லாமல் பரவும் வதந்திகளை நம்பாமல், அரசு சொல்வதை மக்கள் கேட்டு நடந்தாலே போதும் என கூறியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.