×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப் படுகிறதா.? மருத்துவ நிபுணர் குழு என்ன கூறுகிறது?

Doctors talk about 144

Advertisement

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும்  மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.  தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்தநிலையில், ஊரடங்கு  தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி வாயிலாக  ஆலோசனை நடத்தினார். முதல்வர் பழனிசாமியுடனான ஆலோசனைக்குப் பிறகு பேட்டி அளித்த மருத்துவ நிபுணர் கூறுகையில், தமிழகத்தில்  ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை.  

இதற்க்கு பின்னரும், சமூக இடைவெளி, மாஸ்க் அணிவதை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும். ஊரடங்கை உடனே தளர்த்த முடியாது, படிப்படியாகத்தான் தளர்த்த முடியும். தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்த கட்ட முடிவு செய்யப்படும். சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும் என தெரிவித்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#144 #corona
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story