சிகிச்சைக்கு போன பெண்ணிடம் மஜாஜ் என்ற பெயரில் அத்துமீறிய மருத்துவர்! தட்டிக் கேட்டபோது " இங்கு இப்படித்தான் சிகிச்சை அளிக்கப்படும் "என திமிரு பேச்சு! பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!!!
சிகிச்சை என்ற பெயரில் பெண் நோயாளியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக மருத்துவர் மீது புகார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவ சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக மருத்துவர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. கூடுதல் பரிசோதனை என்ற பெயரில் தனி அறைக்கு அழைத்துச் சென்ற மருத்துவர், மருத்துவ நெறிமுறைகளை மீறி நடந்துகொண்டதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தனி அறைக்கு அழைத்துச் சென்ற மருத்துவர்
தகவலின்படி, உடலில் ஏற்பட்ட கடுமையான வலிக்காக அந்தப் பெண் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். முதலில் பொதுவான பரிசோதனை செய்த மருத்துவர், மேலும் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அவரை உள்ளே இருந்த தனி அறைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜோதிடர் பூஜை செய்வதாக கூறி தனி அறைக்குள் 2 மணிநேரம்.... கதற கதற 16 வயது சிறுமியிடம் அத்துமீறல்! ஜாதகம் பார்க்கச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!!!
அதன்பின் உடலுக்கு மசாஜ் செய்ய வேண்டும் எனக் கூறி, ஆடைகளை அகற்றுமாறு மருத்துவர் வற்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பெண் மறுப்பு தெரிவித்தபோதும், “இங்கு இப்படித்தான் சிகிச்சை அளிக்கப்படும்” என்று கூறி கட்டாயப்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவரின் நடவடிக்கையால் அதிர்ச்சி
மருத்துவரின் நடத்தை சந்தேகத்துக்கிடமாக இருப்பதை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாக அங்கிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று மருத்துவரின் செயல்பாடு குறித்து புகார் அளித்துள்ளார்.
பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையிலிருந்த கண்காணிப்பு காட்சிகள் மற்றும் ஊழியர்களிடமிருந்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் கண்டனம்
நோயாளிகள் நம்பிக்கையுடன் அணுகும் மருத்துவத் துறையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மருத்துவர் மீது வந்துள்ள இந்த புகார் சமூக வலைதளங்களிலும் விவாதமாகியுள்ளது.
மேலும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மருத்துவமனைகளில் கடுமையான நடைமுறைகள் அவசியம் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பெண் நோயாளி அளித்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.