தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திமுக கழகமே உங்கள் ஜாதி, திமுகவினரே உங்களின் சாதிசனம் - தொண்டர்களுக்கு தலைமை அறிவுரை.!

திமுக கழகமே உங்கள் ஜாதி, திமுகவினரே உங்களின் சாதிசனம் - தொண்டர்களுக்கு தலைமை அறிவுரை.!

DMK Party to Supporters We Are All Equal and One Advertisement

கழகமே உங்களின் ஜாதி, கழகத்தினரே உங்களின் சாதிசனம் என திமுக தலைமை தொண்டர்களை அறிவுறுத்தி இருக்கிறது. 

திமுக தலைவர் & முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏழை-எளிய மக்களுக்கான ஆட்சியாக அக்கட்சியினரால் போற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் கட்சியினருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக மோதல்கள் போன்றவையும் நிகழ்கிறது.

இதனை கட்சியினர் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். மேலும், சமீபத்தில் பாஜகவினரால் திமுக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு போல சித்தரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பதில் கூறும் வகையில் முதல்வர் இன்று பேசுகையில், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி இல்லை.

dmk

மதத்தின் பெயரால் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சி செய்யும் நபர்களுக்கு எதிரான கட்சி. இவ்வாறான எண்ணம் கொண்டவர்கள் தான் நம்மை பற்றி அவதூறு செய்கிறார்கள் என்று பேசியிருந்தார். இந்த நிலையில், திமுக தொண்டர்களுக்கு முரசொலியில் அறிவுரை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கழகத்திற்குள் "சாதிய அடையாளம் இருக்க கூடாது.

கழகம் தான் உங்களின் ஜாதி. தனிமனித செல்வாக்கில் வளர்ந்த இயக்கம் திமுக கிடையாது. நமது தனித்துவ கொள்கையே நமது வலிமை. உங்களுக்குள் எந்த ஜாதிய அடையாளமும் இருக்க கூடாது. திமுக என்ற கழகமே உங்களின் ஜாதி., தொண்டர்களே உங்களின் ஜாதிசனம். 

பல இடுபொடித்த தோல்விகளை நாம் மிடுக்கோடு எதிர்கொண்டு இருக்கிறோம். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நமது சனங்களும் எதிர்கொள்ள வேண்டிய காலங்கள் சோதனைகள் நிறைந்தவையாக இருக்கும்" என்று கூறப்படுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dmk #DMK Party #MK Stalin #politics #tamilnadu #திமுக #அரசியல் #முக ஸ்டாலின்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story