ஸ்டாலினை வேதனையில் ஆழ்த்திய பாப்பாத்தி அம்மையார் மறைவு! யார் அந்த பாப்பாத்தி அம்மையார்?
DMK pappathi ammal passed away

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரான 75 வயது மூதாட்டி பாப்பாத்தி அம்மையார், இயற்கை எய்தினார் என்ற செய்தி வேதனையை அளிக்கிறது. மூதாட்டி பாப்பாத்தி அம்மையாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரான ஆனால் 75 வயது மூதாட்டி பாப்பாத்தி அம்மையார், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கழக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக அறிவாலயத்தில் அழைத்து ஆலோசனை நடத்திய போது தன் சொந்த செலவில் சென்னைக்கு வந்து இருந்ததை அறிந்தேன்.
அவர் எந்த பொறுப்பிலும் இல்லை என்றாலும் கழகத்தின் மீது கொண்ட பற்றி அறிந்து அவரை அழைத்து பேசியதுடன், கலைஞரை சந்திக்க செய்தேன். மிகுந்த அன்புடனும் கழகப் பற்றுடனும் தலைவரிடம் வாழ்த்து பெற்று, தலைவரையும் வாழ்த்திய அந்த அம்மையார் என்னுடன் செல்பி எடுத்த மகிழ்ந்தார். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்த நிகழ்வு அது' என தெரிவித்திருந்தார்.