தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏன் அப்படி பேசுனீங்க..? ஆ.ராசா நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..

தமிழக முதலமைச்சர் குறித்தும், அவரது தாயார் குறித்தும் அவதூறாக பேசியது தொடர்பாக திமுக எம்.ப

DMK MP A Raja should meet election commissioner Advertisement

தமிழக முதலமைச்சர் குறித்தும், அவரது தாயார் குறித்தும் அவதூறாக பேசியது தொடர்பாக திமுக எம்.பி. ஆ. ராசா இன்று மாலை தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திமுக எம்.பி. ஆ. ராசா அவர்கள் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், தமிழக முதலமைச்சர் குறித்தும், அவரது தாயார் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார்.

TN Election 2021

இதற்கு அதிமுக சார்பாக பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. மேலும் சென்னையில் பிரச்சாரம் செய்தபோது தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் ஆ. ராசா பேசியது குறித்து கண்ணீர் விட்டு அழுதார். இதனால் முதல்வர் குறித்தும் அவரது தாயார் குறித்தும் பேசியது தொடர்பாக ஆ.ராசா வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் குறித்தும், அவரது தாயார் குறித்தும் அவதூறாக பேசியது தொடர்பாக  திமுக எம்.பி. ஆ. ராசா இன்று ( மார்ச் 31) மாலை 6 மணிக்கு தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி  விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN Election 2021 #dmk #Admk #DMK Raja
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story