×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை கைது செய்யாதது ஏன்? தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி.!

DMK kanimozi talk about police inspector case

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்பவர் செப்டம்பர் 17ஆம் தேதி கடத்தி கொலை ‌செய்யப்பட்டார். இதுகுறித்து தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராடி வருகின்றனர். 

இந்தநிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dmk #Kanimozi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story