×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

PMK Ramadoss: ராமதாஸை டீலில் விட்ட திமுக? விசிக கிடுக்குப்புடி.. அடுத்தகட்டம் என்ன?

PMK Ramadoss Alliance Discussion: விசிகவின் எதிர்ப்பு காரணமாக ராமதாசுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பால் ராமதாஸ் உடனான கூட்டணி முயற்சிகள் தடைபட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல்களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பணிகள் தீவிரம்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026க்கான தேதி மார்ச் மாதத்தில் வெளியாகலாம் என்ற நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு, சுற்றுப் பயணம், பிரச்சாரம் என அனைத்து நடவடிக்கைகளும் பரபரப்பாக மாறியுள்ளன. கூட்டணி அமைப்பும் முக்கிய சிக்கலாக மாறியுள்ளது. பல கட்சிகள் தேர்தல் முன்னர் கூட்டணிகளை உறுதி செய்ய தீவிரமாக செயல்படுகின்றன.

இதையும் படிங்க: செங்கோட்டையனின் அடுத்த அதிரடி சம்பவம்! தவெக விஜய்யுடன் இணையும் அதிமுக அமைச்சர்? அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி!

திமுக கூட்டணியில் ராமதாஸ்?

இந்த தருணத்தில், பாமகவின் அன்புமணி தரப்பு அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதே நேரத்தில், ராமதாஸ் ஆதரவாளர்களுடன் கூட்டணி அமைக்க திமுக முயற்சித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரப்பப்பட்டது. ராமதாஸ் தரப்பினருடன் திமுகவினர் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எதிர்ப்பால் ராமதாஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை திமுக தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என கூறப்படுகிறது.

ராமதாஸை தக்கவைக்க தொடரும் முயற்சிகள்:

மறுபுறம், ராமதாஸ் கூட்டணி அமைப்பதை தவெகவுடன் ஆராயும் முயற்சிகள் செங்கோட்டையன் மூலம் நடைபெற்று வருகின்றன. அதிமுகவுடன் ராமதாஸை சேர்க்க ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாமகவுக்கு எதிராக தொடர்ந்த சீராய்வு மனுவில், தேர்தல் ஆணையம் தங்களிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாமகவின் தலைவர் அன்புமணி என்பதை உறுதி செய்துள்ளது.

யாருடன் கூட்டணி?

இந்த நிலையில், பாமகவில் ராமதாஸ் கூட்டணி முயற்சிகளின் எதிர்கால நிலை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது. ஒருகாலத்தில் பாமகவை கூட்டணியில் தக்கவைக்க திமுகவும், அதிமுகவும் போராடி வந்தது. தற்போது தந்தை-மகன் இடையேயான முரண் காரணமாக ராமதாஸ் எந்த கூட்டணிக்கு செல்லலாம் என்ற ஆலோசனையில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விரைவில் ராமதாஸ் தரப்பின் கூட்டணியும் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: BREAKING: டெல்லி கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவித்த காங்கிரஸ் கட்சி! பரபரப்பில் அரசியல் களம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#PMK Ramadoss #ராமதாஸ் #திமுக கூட்டணி #DMK PMK Alliance #tamilnadu politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story