×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீசுக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை... கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்...!!

பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீசுக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை... கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்...!!

Advertisement

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த திமுக நிர்வாகிகள் இருவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவிற்காக விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் திமுக துனைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகியயோர் பாலியல் தொல்லை அறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்த இருவரில், ஒருவரை கைது செய்தனர். மற்றொருவர் தப்பி ஓட முயன்றுள்ளார் அவரையும் காவல்துறையினர் விரட்டி சென்று பிடித்தனர். இதனால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாலியல் தொல்லை அளித்த திமுக நிர்வாகிகளை கைது செய்ய காவல்துறையினர் சென்ற போது விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா தடுத்து நிறுத்தியதாகவும், கைது செய்யக்கூடாது என கூறியதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் சமூக வலை தளத்தில் செய்தியாக வெளியானதை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அதிமுக, பாஜக, போன்ற பல்வேறு அரிசியல் கட்சியினர், பெண்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றும், குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக சுற்றுவதாவும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். 

இந்நிலையில் திமுக நிர்வாகிகள் பெண் காவலரிடம்  மன்னிப்பு கேட்டதால், பெண் காவலர், காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆளுங்கட்சியின் மிரட்டல் காரணமாகவே புகார் வாபஸ் வாங்கப்பட்டதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர. இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இரண்டு திமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்க  உத்தரவிட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் வடக்கு பகுதி, 129அ-வது வட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரவீன், சி.ஏகாம்பரம் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு திமுக நிர்வாகிகள் பிரவீன் மற்றும் ஏகாம்பரத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #dmk #sexually harassed #Female police on security duty
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story