ரயில் பயணிகளே தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? வெளியானது டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க....
தீபாவளி விடுமுறைக்கு முன் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயணிகள் விரைவாக புக்கிங் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தீபாவளி திருநாளை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் தீபாவளி அக்டோபர் 20-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
மூன்று நாள் தொடர் விடுமுறை
அக்டோபர் 18-ம் தேதி சனிக்கிழமை, அக்டோபர் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகியவை விடுமுறை தினங்களாக அமைந்துள்ளதால், அக்டோபர் 20-ம் தேதி திங்கட்கிழமையுடன் சேர்த்து மொத்தம் மூன்று நாள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் பலர் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
ரயில் டிக்கெட் முன்பதிவு
பெரும் அளவிலான பயணிகள் முன்பதிவு செய்ய இருப்பதை கருத்தில் கொண்டு, IRCTC டிக்கெட் புக்கிங் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 17-ம் தேதிக்கான டிக்கெட் புக்கிங் திங்கள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 18-க்கு செவ்வாய்க்கிழமை, 19-க்கு புதன்கிழமை, 20-க்கு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கும்.
இதையும் படிங்க: தமிழக மக்களே தயாரா.?! இன்று முதல்.. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்.!
பயணிகளுக்கான எச்சரிக்கை
ரயில்களில் அதிகமான பயணிகள் செல்லும் சூழ்நிலை ஏற்படக்கூடும் என்பதால், பயணிகள் தங்களது முன்பதிவுகளை தாமதமின்றி செய்யுமாறு ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர் விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊர்களில் தீபாவளி கொண்டாட விரும்பும் அனைவரும் முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்து பயணத்தை சிறப்பாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட் இதோ.!