×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளிநாட்டு பெண் அதிபர் முன்... உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்! வெடித்த விவாதம்... வைரலாகும் வீடியோ!!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் இந்திய பெண் ஊழியர் தீபாவளிக்காக நடனமாடிய வீடியோ வைரலாகி இணையத்தில் ஆதரவும் விமர்சனமும் எழுந்துள்ளது.

Advertisement

கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நடனத்தைக் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில், இது சாதாரண பண்டிகைக் கொண்டாட்டம்தான் என ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் உற்சாக நடனம்

வைரலாகும் வீடியோவில், மஞ்சள் நிறச் சேலை அணிந்த பெண் ஊழியர் ஒருவர், 'வெல்கம் 2 கராச்சி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு உற்சாகமாக நடனமாடுகிறார். அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம்பெற்றுள்ளது. அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் தனது செல்போனில் நடனத்தைப் பதிவு செய்கிறார். பின்னணியில் இருந்த சக ஊழியர்களும் கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: தோண்ட தோண்ட வெளிவரும் துப்பு..! செஞ்சி சிறுமி மாயமான நள்ளிரவில்.. 12:45 மணிக்கு அந்த வீட்டின் முன்பு நின்ற மினி வேன்..! சிபிசிஐடி கிடைத்த சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி..!!!

சமூக வலைதளங்களில் எழுந்த கடும் விமர்சனம்

இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வெளிநாட்டுப் பெண் அதிபரைக் கவர்வதற்காகவே ஊழியர் இவ்வாறு நடனமாடுவதாக விமர்சித்த சிலர், இதை அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்திய ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர் வெளிநாட்டினரை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கும் மனநிலையை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஊழியருக்கு ஆதரவாகவும் கருத்துகள்

ஆனால், இந்த விமர்சனங்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், ஊழியர் தனது மகிழ்ச்சியை நடனம் மூலம் வெளிப்படுத்தியதில் தவறில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஒருவரின் நடனத்தை வைத்து அடிமைத்தனம் என முத்திரை குத்துவது தேவையற்றது என்றும் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். இதனால், ஒரு அலுவலகத்தின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் இரு தரப்பினருக்கும் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: புதிய புயல் சின்னம்..! 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தீபாவளி கொண்டாட்டம் #வைரல் நடன வீடியோ #Corporate Office #Social media debate #diwali celebration
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story