மாற்றுத்திறனாளி சித்ரவதை கொலை.. கை-கால்களை கட்டிப்போட்டு கொடூர தாக்குதல்.. 19 இடங்களில் காயம்.. திக் திக் சம்பவம்.!
Nagarcoil Sabarivarman Death: விசாரணை கைதி சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் சிறையில் நடந்த கொடூர சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
மயக்கம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென்தாமரைக்குளம், ஈத்தங்காடு, நாராயணன்புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் சசிதரன். இவரின் மகன் சபரிவர்மன் (வயது 34). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். ஈத்தங்காட்டில் மளிகைக்கடை நடத்தி வந்தார். கடந்த ஜூலை 09ம் தேதி இவரின் கடையில் நடந்த சோதனையில் குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது. இதனால் கைதுக்குப்பின் நாகர்கோயில் சிறையில் அடைக்கப்பட்டவர், 2 நாட்களுக்கு முன் அதிகாலையில் மயங்கிய நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: 21 வயது இளம் பேட்மிட்டன் வீரரின் உயிரை பறித்த காதல்.. சித்ரவதை செய்து நடந்த கொடூரம்? குடும்பத்தினர் கண்ணீர்.!
மரணம் உறுதி:
மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் மரணமா உறுதி செய்யப்பட்ட நிலையில், சபரிவர்மன் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சபரியை காவல்துறையினர் தாக்கி கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் போர்க்கொடி தூக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, நீதிபதி முன்னிலையில் சபரிவர்மனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சிறையில் நீதிபதி விசாரணையும் நடந்தது. கண்காணிப்பு கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. கைதுக்குப்பின் 2 நாட்கள் எதுவுமே சாப்பிடாமல் இருந்த சபரிவர்மன், ஜூலை 12ம் தேதி இரவு 9 மணியளவில் குழந்தைகளை பார்க்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
19 இடங்களில் காயம்:
அந்த சமயத்தில் கண்காணிப்பு பணிக்கு வந்த வர்தான் ஜெகன் சபரியை தாக்கி கட்டிபோட்டுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து வந்தவர் கட்டை அவிழ்த்துவிட்டு தாக்கி இருக்கிறார். இதனால் சபரிவர்மன் இரவிலேயே இருந்ததாக தெரியவரும் நிலையில், அதிகாலையில் நடந்த கணக்கெடுப்பு பணிக்கு வரவில்லை. பின் நேரில் சென்று பார்த்தபோது அனைத்தும் உறுதியாகி இருக்கிறது. ஜெகனின் ஷிப்ட் முடிந்து அடுத்த ஷிப்டுக்கு வந்த சிவகுமாரும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். உடலில் 19 காயங்கள் இருப்பதை பிரேத பரிசோதனை உறுதி செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார், சிறை பொறுப்பாளர் சுரேஷ் ஆகிய 3 பேரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போலியோ சொட்டுமருந்து எடுத்துக்கொண்ட குழந்தை திடீர் மரணம்.. கடலூரில் பெற்றோர்கள் கண்ணீர்.!