×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#தமிழகம்: ரீலிஸ் போடும் பெண்கள் டார்கெட்.. 2 நாட்கள் உல்லாச பிளான்.. பெண்ணை குழந்தை முன்னே., சைக்கோ சைபுதீன் பகீர்.!

#தமிழகம்: ரீலிஸ் போடும் பெண்கள் டார்கெட்.. 2 நாட்கள் உல்லாச பிளான்.. பெண்ணை குழந்தை முன்னே., சைக்கோ சைபுதீன் பகீர்.!

Advertisement

வீடியோ ரீலிஸ் பதிவிடும் பெண்களை குறிவைத்து பழகி உல்லாச வாழ்க்கை நடத்தி வந்த காமுகன், திருமணமான பெண்ணை கள்ளக்காதலில் வீழ்த்தி 4 நாட்களில் தனது சுயரூபத்தை வெளிப்படுத்திய பயங்கரம் நடந்துள்ளது. இறுதியில் பெண்ணும், அவரின் குழந்தைகளும் பத்திரமாக காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் சைபுதீன். இவர் டிக் டாக் செயலி உபயோகம் செய்து வந்த நிலையில், அதில் வீடியோ பதிவிடும் பெண்களை குறிவைத்து நல்லவர் போல நடித்து, பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பின்னர், பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்து சென்று உல்லாசமாக இருந்து, மீண்டும் பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்த நிலையில், இவர் வசித்து வரும் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள பெண் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். பெண்ணை குறிவைத்த சைபுதீன், ஒரு வருடமாக பெண்ணிடம் பழகி, தனது பழக்கத்தை கள்ளக்காதலாக மாற்றியுள்ளார். 

இதனையடுத்து, சம்பவத்தன்று வழக்கம்போல 2 நாட்கள் வெளியே சென்று வரலாம் என்று பெண்ணிடம் தெரிவிக்க, உடன் குழந்தைகளையும் அழைத்து வந்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்று கூறி இருக்கிறார். கள்ளக்காதலில் மதிமயங்கி இருந்த பெண்ணும் சைபுதீனுடன் சென்ற நிலையில், இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று கணவன் - மனைவியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். 

அங்கு இருவரும் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், 4 நாட்களில் கள்ளக்காதல் கசந்ததால் சைக்கோ சைபுதீன் பெண்ணை பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாக்கியுள்ளார். மேலும், இரவுகளில் உறங்க கூட விடாமல் கொடுமை செய்த நிலையில், பெண்ணின் குழந்தைகளையும் கொடுமை செய்துள்ளார். இதனை பெண் தட்டிக்கேட்ட நிலையில், சைபுதீன் கள்ளக்காதலியை தாக்கி, குழந்தையை கடித்து, கத்தியால் குத்தியுள்ளார். 

கள்ளக்காதலி மற்றும் குழந்தைகள் வெளியே சென்றுவிடக்கூடாது என வீட்டினை பூட்டியே வைத்திருந்த நிலையில், சம்பவத்தன்று சைபுதீன் போதையில் உறங்கும்போது பெண்ணின் குழந்தை பக்கத்து வீட்டாரின் செல்போனை வைத்து தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்க, அதன்பேரில் அதிகாரிகள் மகாராஷ்டிரா சென்று குழந்தை மற்றும் பெண்ணை மீட்டுள்ளனர். சைபுதீனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #Saifuddin Dindigul #cheating #woman #Reels #video #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story