தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுபோதையில் தினமும் தாய், தங்கை சித்ரவதை... குடிகார தகப்பனை கொலை செய்த 11 ஆம் வகுப்பு மாணவன்.!

மதுபோதையில் தினமும் தாய், தங்கை சித்ரவதை... குடிகார தகப்பனை கொலை செய்த 11 ஆம் வகுப்பு மாணவன்.!

Dindigul Palani 11 th Class Student Killed Father due to Liquor Drinking Torture Atrocity Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, சத்திரப்பட்டி முல்லை நகரில் வசித்து வருபவர் ஓமந்தூரார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 1 மகன் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ஓமந்தூராருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

இதனால் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக்கியுள்ளார். இதனால் ஓமந்தூராரின் மகன் மனவேதனையில் இருந்த நிலையில், அவ்வப்போது தந்தையின் செயல்பாடுகளை கண்டித்து இருக்கிறார். மகனின் அறிவுரையை கேட்காத தந்தையும் தனது நடவடிக்கையை தொடர்ந்து வந்துள்ளார். 

Dindigul

சம்பவத்தன்று இரவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஓமந்தூரார், மனைவி மற்றும் மகளை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகன் கிரிக்கெட் மட்டையை எடுத்து தந்தையின் தலையில் அடிக்கவே, இரத்த வெள்ளத்தில் மிதந்த ஓமந்தூரார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்ற மகன் தகவலை கூறி சரணடைந்தார். 

ஓமந்தூராரின் மகன் 11 ஆம் வகுப்பே பயின்று வரும் நிலையில், தந்தையின் மதுப்பழக்கத்தால் பல்வேறு பிரச்சனைகளை மனரீதியாக எதிர்கொண்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் மற்றும் தாய், தங்கை கண்முன்னே தந்தையால் அடிக்கப்படுவதால் வெகுண்டெழுந்து தந்தையின் வாழ்க்கைக்கு மகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் துறையினர் 11 ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #tamilnadu #palani #son #father #Drinking liquor #torture
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story