×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12 வயது மகளை உறவினர், நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த காமுக தந்தை.. மூவரால் சிறுமிக்கு நடந்த கொடுமை..!!

12 வயது மகளை உறவினர், நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த காமுக தந்தை.. மூவரால் சிறுமிக்கு நடந்த கொடுமை..!!

Advertisement

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் பகுதியைச் சார்ந்தவர் லிங்கமூர்த்தி (வயது 47). திருமணமான சில ஆண்டுகளிலேயே இவர் மனைவியை பிரிந்து வந்துள்ளார். சமையல் தொழில் செய்து வரும் இவருக்கு 12 வயதுடைய மகள் இருக்கிறார். 

மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த லிங்கமூர்த்தி, தனது உறவினரான நாகல்நகர் கண்ணன், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நண்பர் முகமது ரபிக் ஆகியோருடன் சேர்ந்து சொந்தமகளை பலாத்காரம் செய்ததோடு தனது நண்பர்களுக்கும் அத்துமீற ஒத்துழைத்துள்ளார். 

இந்த நிலையில் சிறுமியின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதால் லிங்கமூர்த்தி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியாகவே, இந்த விசயம் மாவட்ட குழந்தைகள் நலத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகார் பேரில் விசாரணை நடந்த நிலையில், விசாரணையில் சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் குறித்த பகீர் தகவல் அம்பலமானது.இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Dindigul #Sexual Harrasment #police #Pocso Act
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story