தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதல் கணவருக்கு தெரியாமல் 2-வது திருமணம்... மருமகனுக்கு விபூதியடித்த மாமனார் - மாமியார்.. தனிகுடித்தனமாம்..!

முதல் கணவருக்கு தெரியாமல் 2-வது திருமணம்... மருமகனுக்கு விபூதியடித்த மாமனார் - மாமியார்.. தனிகுடித்தனமாம்..!

dindigul-married-woman-once-again-tie-with-another-perm Advertisement

கணவர் உயிருடன் இருக்கும்போது வேலையிடத்தில் பழக்கமான ஆண் நண்பரை பெண்மணி திருமணம் செய்து மாதக்கணக்கில் வாழக்கை நடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், எட்டிகுளத்துப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 30). இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றிவிட்டு தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பாடியூரை சேர்ந்த பெண்மணி வீரழகு. இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால், அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வீரழகு தனியார் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, 3 மாதமாக கணவரை பிரிந்து பெற்றோரின் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மனைவியை பார்க்க ஆனந்த் மாமனார் வீடிற்கு செல்லவே, அங்கு வீரழகு இல்லை. 

மனைவி குறித்து கேட்டபோதும் மாமனார் - மாமியார் தரப்பில் சரிவர பதில் வரவில்லை. வீரழகுக்கு போனில் தொடர்பு கொள்ள முயற்சியதும் பலனில்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வீரழகு வேறொரு வாலிபரை திருமணம் செய்தது தொடர்பான புகைப்படம் ஆனந்தின் வாட்ஸப்புக்கு கிடைத்துள்ளது. 

tamilnadu

மேலும், நான் வேறொரு வாலிபரை திருமணம் செய்துகொண்டேன். நீ என்னை தேடி வரவேண்டாம் எனவும் தகவல் அனுப்பியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆனந்த் விசாரிக்கையில் மனைவிக்கு பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட வாலிபரின் பழக்கம் மற்றும் அவருடனான திருமணம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கணவர் உயிருடன் இருக்கையில் விவாகரத்து கூட பெறாமல் மனைவி பெண் மற்றொரு திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #marriage #couple #police #Dindigul
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story