தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் தற்கொலை.. கல்லூரி காதல் கசந்ததால் சோகம்.!

காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் தற்கொலை.. கல்லூரி காதல் கசந்ததால் சோகம்.!

Dindigul Love Married Girl Dies by Suicide  Advertisement

படிக்கும் வயதில் காதலில் விழுந்து 21 வயதில் திருமணம் செய்த இளம்பெண், 22 வயதில், திருமணமான 8 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டு உயிரை விட்ட சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி, ஜெயந்தி காலனியில் வசித்து வருபவர் ஜெயபாலன். இவரின் மனைவி ஜெனிபர் (வயது 22). தம்பதிகள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார்கள். 

கல்லூரி காதல்-திருமணம்

இருவரும் தனியார் கல்லூரியில் படித்துவந்தபோது பழக்கம் ஏற்பட்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க: பகுதி நேர வருமானமாக கஞ்சா பயிரிட்டு விற்பனை: 18 வயது கல்லூரி மாணவர் கைது.!

கருத்து வேறுபாடு

இந்நிலையில், சில நாட்களாகவே தம்பதிகளிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி வாக்குவாதம், தகராறு உண்டாகி இருக்கிறது.

Dindigul

தற்கொலை

இதனால் மனமுடைந்துபோன் பெண்மணி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர், ஜெனீபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

காவல்துறை விசாரணை

அங்கு மருத்துவர்கள் ஜெனிபரின் மரணத்தை உறுதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர், திண்டுக்கல் ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. 
 

இதையும் படிங்க: திண்டுக்கல்: கழன்று ஓடிய சக்கரம்.. தறிகெட்டு பாய்ந்த கார்.. 2 பேர் பலி., 3 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #காதல் திருமணம் #தற்கொலை #கல்லூரி காதல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story